நாய்க்கு தனது மனைவியின் பெயரை வைத்ததால், பக்கத்து வீடு பெண்ணை தீயிட்டு கொளுத்திய நபர்..!

நாய்க்கு தனது மனைவியின் பெயரை வைத்ததால், பக்கத்து வீடு பெண்ணை தீயிட்டு கொளுத்திய நபர்.
குஜராத்தை மாநிலத்தை சேர்ந்த நீடாபெண் சர்வையா என்பவர் தான் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்க்கு சோனு என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், சூராபாய் பர்வத் என்பவரும் தனது மனைவியை சோனு என அழைத்து வந்த நிலையில், இந்த பெயர் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று நீடாபென் தனது மகனுடன் வீட்டில் இருந்தபோது அங்கு ஐந்து பேருடன் சென்ற சூரா பாய் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்கப்பட்ட பெண் சமையலறைக்கு சென்று தப்பிக்க முயன்றபோது, சுராபாயுடன் வந்த மற்றுமொரு நபர் அங்கிருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி தீவைத்து உள்ளதாக கூறப்படுகிறது. தீப்பற்றிய நிலையில் அலறி அடித்து வெளியே ஓடி வந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025