#20 வருடகாலத் தேடல்-இயக்குநர் ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது.!

மகாராஷ்டிராவில் பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷனை 20 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கியால் சுட்ட ஷார்ப்ஷீட்டரை கைது செய்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக பதுங்கிய 52வயதான சுனில் வி கெய்க்வாட் என்பவரை 2000 ஆண்டு இயக்குநர் ராகேஷ் ரோஷனை மும்பையில் சுட்டதாக வழக்கு ஒன்றில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி தானே அருகே உள்ள கல்வாயில் சுனிலை சுற்றுவளைத்து கைது செய்தனர்.இது குறித்து மத்திய குற்றப்பிரிவு மூத்த ஆய்வாளர் அனில் ஹொன்ராவ் கூறுகையில் கைது செய்யப்பட்ட சுனில் மீது ஏற்கனவே11 கொலை மற்றும் 7 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
T
லேட்டஸ்ட் செய்திகள்
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025