பஞ்சாப், அமிர்தசரஸில் மொபைல் கடை ஊழியர் மீது போலீஸ்காரர் ‘தற்செயலாக’ துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், மொபைல் கடையில் பணிபுரிந்து வந்த இளைஞர் மீது போலீஸ் அதிகாரி, தன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். மொபைல் கடையில் நின்று கொண்டிருந்த போது போலீஸ் அதிகாரி, துப்பாக்கியை வெளியில் எடுத்து அதை சரிபார்த்து கொண்டிருந்தார், அப்போது தற்செயலாக துப்பாக்கியின் ட்ரிகர் அழுத்தப்பட்டு அந்த இளைஞர் சுடப்பட்டுள்ளார். உடனே காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனையடுத்து, அந்த போலீஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது குறித்து அமிர்தசரஸ் வடக்கு உதவி காவல் ஆணையர்(ACP) வரீந்தர் சிங் கூறும்போது, நாங்கள் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தோம், அதன் அடிப்படியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
நேரில் கண்ட சாட்சியின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், காயமடைந்த நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அமிர்தசரஸ் வடக்கு ஏசிபி(ACP) வரீந்தர் சிங் மேலும் தெரிவித்தார்.
unknown nodeunknown node