காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய காவலர்!

காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய தலைமை காவலர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா எனுமிடத்தில் மிக வறுமையில் தவித்த தாய் தனது 13 வயது மகளை கவனித்துக் கொள்ள முடியாததால் ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளார். காப்பகத்தில் சிறுமிக்கு தேவையான வசதிகள் இல்லை எனவும் சிறுமி சிரமப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி அந்த காப்பகத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்து யாரும் இல்லாத சமயத்தில் அங்கு இருந்து தப்பி ஓடியுள்ளார். சிறுமியை காணவில்லை என்ற காப்பகத்தின் புகாரின் அடிப்படையில் காவலர்கள் அச்சிறுமியை தேடியுள்ளனர். இந்நிலையில் சிறுமி இருந்த இடம் அறிந்து காவலர்கள் அவளை கண்டறிந்து மீண்டும் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அதன்பிறகு விசாரணை என்ற பெயரில் தலைமை காவலர் ஒருவர் அந்த சிறுமியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது கைதிகள் அடைத்து வைக்கக்கூடிய லாக்கப்பில் சிறுமியை கற்பழித்து துன்புறுத்தி உள்ளார். அவர் மட்டுமல்லாமல் அவருடன் அங்கிருந்த சில காவலர்களும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமி காப்பகத்தில் இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு பின் அறிந்த அதிர்ச்சி அடைந்த தலைமை காவலர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியை கற்பழித்தது மட்டுமல்லாமல் அவர் கர்ப்பம் அடைந்ததை யாருமறியாமல் கருக்கலைப்பு செய்த தலைமை காவலர் மற்றும் அவருடன் சேர்ந்து சில காவலர்கள் மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காவலர்கள் மீதான தன்னம்பிக்கையும் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025