டெல்லி இளம்பெண் மரணம்.! பாலியல் வன்கொடுமை காயங்கள் இல்லை.!

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலில் பாலியல் ரீதியிலான காயங்கள் எதுவும் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலில் பாலியல் ரீதியிலான காயங்கள் எதுவும் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று அதிகாலை டெல்லியில் இளம் பெண் மீது கார் மோதிய விபத்தில் காருக்கு கீழே அந்த பெண் சில கிமீ தூரம் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூட சில குரல்கள் எழுந்தது.

தற்போது அந்த பெண்ணின் பிரதே பரிசோதனை அறிக்கையின் படி, பாலியல் வன்கொடுமை காயங்கள் எதுவும் உடலில் இல்லை எனவும், தலை, முதுகுத்தண்டு, இடது தொடை எலும்பு, இரண்டு கீழ் மூட்டுகளில் காயங்கள் இருக்கிறது.  அந்த காயம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு ஆகியவையே இறப்புக்கான தற்போதைய தற்காலிக காரணம் என  அறிக்கையில் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.