பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி.! புதுச்சேரி அமைச்சர் அறிவிப்பு.!

The Puducherry Education Minister has announced that small grain snacks will be provided to school students.

school students

பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் அறிவிதுள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதியை தவிர்த்து ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது போலவே, புதுச்சேரி அரசும் அறிவித்து இருந்தது.

தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பை அம்மாநில உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலதிற்குட்பட்ட 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு சத்தான சிறுதானிய உணவுகள் மாலை நேர சிற்றுண்டியாக வழங்கப்பட உள்ளது எனவும் , அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். இந்த சிற்றுண்டி திட்டமானது புதுச்சேரியில் அனைத்து பிராந்திய அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும் என அமைச்சர் தெரிவித்தார்.