ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்.சி.ஓ அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. அடுத்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற இருக்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பயங்கரவாதம், பிராந்திய பாதுகாப்பு, செழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவைத் தவிர, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற மற்ற SCO உறுப்பினர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உறுப்பு நாடுகளைத் தவிர, ஈரான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன
முன்னதாக, ஜூன் 30 அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளாடிமிர் புடின் இடையே தொலைபேசி உரையாடலில், இரு தலைவர்களும் SCO மற்றும் G20 உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
