தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடப்பதை தடுக்க உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் புகாரை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக வழக்கறிஞர்கள், மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாலியல் வழக்கை எதிர்கொண்ட விதம் சரியில்லை என வழக்கறிஞர்கள், மகளிர் அமைப்புகள் குறைகூறியது. .இதனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடப்பதை தடுக்க உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.