#Breaking : 500, 1000 ரூபாய்நோட்டு பணமதிப்பிழப்பு செல்லும்.! உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

2016ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ள்ளது.

2016ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு , இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு இருந்தது.

மொத்தமாக 58 மனுக்கள் மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பணமதிப்பிழப்பு செல்லும் எனவும், இனி அதனை திரும்ப பெற முடியாது எனவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது .

பணமதிப்பிழப்புக்கு எதிராக போடப்பட்ட 58 மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.