உ.பி.யில் 32 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு 32 வயது நபரின் வயிற்றில் இருந்து 62 ஸ்டீல் ஸ்பூன்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நோயாளியிடம் மருத்துவர் டாக்டர் ராகேஷ், நீங்கள் ஸ்பூன் சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது, அந்த நபர் ஒரு வருடமாக சாப்பிட்டு வருகிறேன் என்று நோயாளி கூறியதாக, மருத்துவர் தெரிவித்தார்.
ஒரு சாதாரண நபர் ஒரு கரண்டியை சாப்பிடவது என்பது முடியாது காரியம் என்பதால் நோயாளி மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் மேலும் கூறினார்.
unknown node