மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு.! பதற்றத்தில் வாக்காளர்கள்…

Manipur Polling Gun shoot

Election2024 : மணிப்பூர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் தூப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102 தொகுதிகளில் தற்போது முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் , புதுச்சேரி உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.

மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிகளில் இன்று ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது. மணிப்பூரிலும் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வாக்குப்பதிவு நடைபெற்று வந்தநிலையில், மொய்ராங் சட்டமன்ற தொகுதியில் தமன்போக்பி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் புகுந்த மர்மநபர்கள் வாக்குசாவடியில் துப்பாக்கிசூடு நடத்தினர். திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் வாக்காளர்கள் அங்கும் இங்கும் பதறியடித்து ஓடினர். நல்வாய்ப்பாக இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

மணிப்பூரில் கடந்த வருடம் மெய்தி – குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு நாட்டையே அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான கலவரங்களுக்கு பின்னர் கூடுதல் பாதுகாப்புடன் இன்றைய நாள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai