அனாதை குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.! மாநில அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.!

பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை ஆதலால் இருவருக்கும் ஒரே மாதியான சலுகைகள் வழங்க வேண்டும் என மும்பை

பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை ஆதலால் இருவருக்கும் ஒரே மாதியான சலுகைகள் வழங்க வேண்டும் என மும்பை நீதிமன்றம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் அனாதை பெற்றோர் அல்லாத அனாதை குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீடானது பெற்றோர்களால் கைவிடப்பட்ட 2 குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.பட்டேல் மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கருத்து :இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி அமர்வு, அனாதைகளின் வரையறையை நாங்கள் கவனிக்கிறோம். அதில் சட்டபூர்வமாக பெற்றோர் அல்லாத பாதுகாவலர் குழந்தையை பராமரிக்க முடியாமல் இருந்த குழந்தைகளுக்கும் அனாதை குழந்தைகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அனாதை குழந்தைகள் :இது குறித்து வாதிட்ட அரசு வழக்கறிஞர், அனாதை குழந்தைகளுக்கு மட்டுமே அரசு இட ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் என்பதால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க முடியும். மாறாக கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு சான்றிதழை வழங்க முடியாது என அவர் வாதிட்டார். மேலும் ,  அனாதை குழந்தைகளை பராமரிக்க யாரும் இல்லை. ஆனால், கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரிக்க ஆட்கள்(பாதுகாவலர்கள்) இருக்கிறார்கள். எனவே, இருவரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

கைவிடப்பட்ட குழந்தைகள் :ஆனால், நீதிபதி அமர்வு குறுக்கிட்டு, அனாதை குழந்தையை விட கைவிடப்பட்ட குழந்தை எந்த அடிப்படையில் உயர்ந்தது என்று அரசு கருதுகிறது? என்பதை விளக்குமாறு கேட்டுக் கொண்டனர். இரண்டு குழந்தைகளுக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. இட ஒதுக்கீட்டுக்காக அனாதை குழந்தைகள் கைவிடப்பட்ட குழந்தைகள் என நியாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இது முற்றிலும் அர்த்தமற்றது என்று தங்கள் கருத்தை நீதிபதி அமர்வு முன்வைத்தனர்.

மேலும்,  நீதி அமர்வு கூறுகையில், நாங்கள் அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது மிகக் குறைவான அதிகாரத்துவத்தையும், அதிகமான அக்கறையையும் தான் எதிர்பார்க்கிறோம். தவிர,  பெற்றோர்கள் குழந்தைகளை விட்டு சென்று விட்டால் அதனை காரணம் காட்டி கைவிடப்பட்ட குழந்தைகள் என சுட்டி காட்டி சான்றிதழ் தர மறுப்பது மோசமான செயல் என நீதிபதிகள் கூறினர்.

போலீஸ் ஆவணங்கள் :அதற்கு பிறகு போலீஸ் ஆவணங்களை நீதிபதி அமர்வு கேட்டுக் கொண்டது. அதன்படி இந்த வழக்கை தாக்கல் செய்த இரண்டு சிறுமிகளின் (தற்போது அவர்கள் பெரியவர்கள் ) பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என போலீஸ் அறிக்கை தெரிவித்து இருந்தது.

அரசுக்கு உத்தரவு :இந்த காவல்துறை அறிக்கையை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் தற்போது பெரியவர்களாக இருந்தாலும், கடந்த காலத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் என்பதை உறுதிப்படுத்தி, அனாதை குழந்தைகளுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கி அதற்கான சான்றிதழை அரசு வழங்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த உத்தரவை அடுத்து , வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைதது, அதற்குள் மாநில அரசு சம்பந்தப்பட்ட இரு பெண்களுக்கும் உரிய சான்றிதழை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.