ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி 59 சதவீதம் அதிகரித்ததுடன், நாளொன்றுக்கு ஆறரை கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
புல்லட் ரயில் திட்டத்திற்கான பணிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், கூறினார். முன்னதாக பயணிகளின் குறைகளை தீர்ப்பதற்காக “ரெயில் மதத்” மற்றும் ரயிலில் வினியோகிக்கப்படும் உணவு விவரங்களை அறிய “மெனு ஆன் ரெயில்ஸ்” ஆகிய இரு செல்போன் அப்ளிகேசன்களையும் பியுஷ்கோயல் தொடங்கி வைத்தார்.