'டிக்கா உட்சவ்' – இந்தியா முழுவதும் 4 நாட்களில் 1,28,98,314 பேர் செலுத்தி கொண்டனர் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

In four days, 1,28,98,314 people were vaccinated against coronavirus, according to the Federal Ministry of Health.

நான்கு நாட்களில் 1,28,98,314 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்தியாவில் கொரோன வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட டிக்கா உட்சவ் நிகழ்ச்சியில் தகுதி வாய்ந்தவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதில், நான்கு நாட்களில் 1,28,98,314 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடுவதற்கு ஊக்கம் அளிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சியானது, ஏப்ரல் 11 முதல் 14 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ‘டிக்கா உட்சவ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.