Today’s Live : ஆளுநருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்.!

தீர்மானம் நிறைவேற்றம்:

தீர்மானம் நிறைவேற்றம்:

தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

10.04.2023 1:30 PM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து பேரவையில் உரையாற்றினார்.

“நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம்” ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார். சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

10.04.2023 12:35 PM

தீர்மானம் நிறைவேற்றம் :

ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆளுநர் செயல்பாடுகள் குறித்த தீர்மானமனத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்.

10.04.2023 12:00 PM