கர்நாடகா மாநிலத்தில் தெருநாய் கடித்து பிறந்த குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் அரங்கேறி உள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டு அருகே, பிறந்த குழந்தையின் உடலை தெருநாய் ஒன்று இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் புதிதாகப் பிறந்த குழந்தையை வாயில் கவ்விக்கொண்டு மருத்துவமனையின் மகப்பேறு வார்டு முழுவதும் எழுத்து சென்றதை கவனித்த மக்கள் அதனை தொரத்தி சென்றுள்ளனர்.
பின்னர், நாயை விரட்டிய மக்கள் அந்த குழந்தையை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பரிதாப சம்பவம் அந்த குடும்பத்திற்கும் அரசு மருத்துவனைக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. கவன குறவையாக இவ்வாறு நடந்ததா? என்று போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த பகுதியில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், இது தொடர்பாக மக்கள் புகார் அளித்தும், மருத்துவமனை மற்றும் நகராட்சி அதிகாரிகளும் ஏந்திவதை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.