தெற்கு காஷ்மீரில் நடந்த மோதலில் இரண்டு லஷ்கர்-இ-தைபா (எல்இடி) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் சிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை சிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த மோதலில் இரண்டு லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
unknown node