கேரளாவில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி – மொத்த பாதிப்பு 48 ஆக உயர்வு...!

While 46 people have already been infected with the Zika virus in Kerala, two more have been confirmed infected with the Zika virus.

ஏற்கனவே கேரளாவில் 46 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நிலையில், பலர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். தற்பொழுது அங்கு 1.40 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், அடுத்ததாக கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. ஏற்கனவே, 46 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவருக்கு தற்போது ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கேரளாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.