ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை...!

Two terrorists have been shot dead in an attack by security forces in Jammu and Kashmir.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியின் நாக்பெரான்-தார்சார் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது அந்த வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை கண்டறிந்து, அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பயங்கரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் வேறு யாரும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.