நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளதுஆனால் பாஜகவின் பிரதான எதிர்க்கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ-வும், பாஜகவில் இணைந்தார்.இது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.