ஐ.நா. பொதுச் செயலாளார் அண்டோனியோ கட்டரெஸ் ((Antonio Guterres)) இந்தியா வருகிறார்.
வரும் அக்டோபர் 1-ஆம் தேதி இந்தியா வரும் அவர், டெல்லியில் ஐ.நா.வின் புதிய அலுவலகத்தைத் தொடங்கிவைக்க இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அக்டோபர் 3-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும், பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசுகிறார்.
unknown nodeவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரையும் அவர் சந்திக்கிறார். சர்வதேச சூரியசக்திக் கூட்டத்தின் முதல் கூட்டத்திலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் பங்கேற்கிறார். அவர் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
DINASUVADU