குடும்ப தகராறு காரணமாக 4 வயது சிறுவனை கடத்தி, கொலை செய்த மாமா ....!

A 4-year-old boy has been abducted and murdered by a relative in Hyderabad over a family dispute.

ஹைதராபாத்தில் குடும்ப தகராறு காரணமாக 4 வயது சிறுவன்  உறவினரால் கடத்தி, கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள மைலார்தேவ்பள்ளி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 4 வயது சிறுவனை அவரது உறவினர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுவன் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் சிறுவனை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவன் நான்கு வயதேயானவர் என்பதால் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் பின்னதாக இந்திரா சொசைட்டி என்னும் பகுதியில் ஒரு சிறுவனின் சடலம் இருந்ததை கண்ட உள்ளூர்வாசிகள் போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது காணாமல் போயிருந்த சிறுவன் தான் சடலமாக இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக விசாரித்ததில் கொலைக்கு பின்னணியில் வீரேஸ் எனும் சிறுவனின் உறவினர் இருப்பது தெரியவந்துள்ளது.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது சகோதரி மகேஸ்வரி வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்பொழுது அவர்களுக்குள் சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீது இருந்த கோபத்தில் இருந்த சிறுவனை  வீரேஸ் சிறுவனை கடத்தி கொலை செய்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. தற்போது இதுதொடர்பாக வீரேஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.