இன்று சென்னை, தரமணியில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டியூட் பேஷன் டெக்னாலஜியில் பிரதமரின் வேலைவாய்ப்பு திருவிழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சென்னை வந்திருந்தார்.
அவரிடம் செய்தியாளர்கள் மணிப்பூர் கலவரம் பற்றி கேள்வி எழுப்பினர். அவர் அதற்கு, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும், இதனை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என்றும் ஒருவேளை மணிப்பூர் பற்றி பேசினால், அது எதிர் கருத்தாக மாறிவிடகூடும் எனமத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
