இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம்...உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்...!!

உத்தரபிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வரும் சூழலில்  60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு உத்தரபிரதேச அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படும்

உத்தரபிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வரும் சூழலில்  60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு உத்தரபிரதேச அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் மாநில அரசிசு சார்பில் முதியவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்ற  ஜனவரி 30 வரை  மாநில அரசின் சார்பில் முகாம்கள் நடைபெற்று வரும் என்று முதல்வர்  யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.