சைக்கிளில் சென்ற பள்ளி மாணவிக்கு தொந்தரவு அளித்த உ.பி காவலர்.! வீடியோ வைரலானதை தொடர்ந்து சஸ்பெண்ட்.!

உ.பி மாநிலத்தில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவிக்கு தொந்தரவு அளித்த காவலரை சஸ்பெண்ட் செய்தது மாநில காவல்துறை.
உத்திர பிரதேச தலைநகர் லக்னோவின் சதார் பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை உ.பி காவலர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, மாணவியை தொந்தரவு செய்ததாக கூறப்படட்டது. இந்த சம்பவத்தை காவலர் வாகனத்திற்கு பின்னால் வந்த ஒரு பெண் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து வீடியோ எடுத்த நபர், உ.பி காவலர் ஷாதாத் அலி என்றும், பள்ளி மாணவியை தொடர்ந்து பாலோ செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்ட்டப்பட்டது. இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், சம்பந்தப்பட்ட காவலரை உபி காவல்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பிறகு, லக்னோ டிஜிபி அபர்ணா கௌசிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ சம்பந்தப்பட்ட காவலர் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் தன் மீதான குற்றத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சஸ்பெண்ட்டில் இருப்பார்’ எனவும் டிஜிபி கூறினார்.
A MusIim man in police constable uniform is caught harassing a minor school girl in Lucknow.. As per locals, he’s harassing school going minor girls for a long time..
Hats off to that lady for confronting him… we need more such vigilant people in our society… pic.twitter.com/u5KkXMhzKS
— Mr Sinha (@MrSinha_) May 3, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025