நாடாளுமன்றம் நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் எப்போது நடந்தாலும் இந்தியாவின் பிரதமரை (பெரும்பான்மையாக) தேர்வு செய்ய உள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம் தான்
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேலைகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை படு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 49 ஆக இருக்கிறது, அதனை போல உத்தரபிரதேசத்தில் 80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவின் பிரதமரை இந்த மாநிலம் தான் தேர்வு செய்யும். உத்தரபிரதேசத்தை எந்த கட்சி கைப்பற்றுகிறதோ அந்தக் கட்சிக்குத்தான் பிரதமர் வாய்ப்பு வரும் என்பது எழுதி வைக்காத ஒரு விதியாகும்.
unknown nodeசென்றமுறை 2014ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி உத்தரப்பிரதேசத்தில் 71 இடங்களில் வென்றது. இதன் காரணமாக பெரும்பான்மையான இடத்தைப் பிடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும் பாரதிய ஜனதா கட்சியி. அதனை போல இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் எந்த கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்கிறதோ அந்த கட்சிக்கு கிட்டத்தட்ட இந்தியாவின் ஆட்சி கட்டிலில் அமர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.