உத்தரபிரதேச பாஜக தலைவர் சுட்டு கொலை.. யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு .!

உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் இன்று காலை நடைப்பயிற்சி செய்ய வெளியே சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று

உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் இன்று காலை நடைப்பயிற்சி செய்ய வெளியே சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சஞ்சய் கோகர், மேற்கு உத்தரபிரதேசத்தின் பாக்பாத்தில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே இன்று காலை இறந்து கிடந்தார். இதனையடுத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டு 24 மணி நேரத்திற்குள் அறிக்கை கேட்டுள்ளார்.

பாஜக தலைவர்  சஞ்சய் கோகர் தனக்குச் சொந்தமான இடத்தில் நடந்து கொண்டிருந்தபோது பலமுறை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். கோகரின் உடல் கரும்பு தோட்டத்தின் அருகில் இருப்பதை மக்கள் மற்றும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

விசாரணையில் இது தனிப்பட்ட பகை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை முழுமையாக விசாரித்து விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவார். இந்த வழக்கில் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்று  பாக்பத் மாவட்ட காவல்துறை அஜய் குமார் கூறினார்.

unknown node