பாஜகவில் இணைந்தார் பிரபல நடிகை ஜெயப்பிரதா!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியாவிலும் தமிழகத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தேர்தலின்போது கட்சி தாவல் இயல்பான ஒன்றாக இருந்தாலும், தற்போது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியாவிலும் தமிழகத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தேர்தலின்போது கட்சி தாவல் இயல்பான ஒன்றாக இருந்தாலும், தற்போது நடிகர் நடிகைகள் தேசியக்கட்சிகள் அணிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது தமிழில் சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜெயப்பிரதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.