Video: பிரபல மாலில் பயங்கர தீ விபத்து.! வானத்தில் கிளம்பிய கருப்பு புகை மண்டலம்...

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள அமராவதி என்ற பிரபல மாலில் உள்ள உணவகத்தில இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்பு

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள அமராவதி என்ற பிரபல மாலில் உள்ள உணவகத்தில இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் பல வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. தீ விபத்தால் வானில் கருப்பு புகை மண்டலமாக கிளம்பியதால், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை, யாரேனும் உள்ளே சிக்கிக்கொண்டார்களா? உயிரிழப்பு ஏதுனும் இருக்கிறதா? என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. கூடுதல் தகவலுக்காக காத்திருப்பு….

unknown node