தென்மேற்கு பருவக்காற்று மழையால் உத்திரபிரதேசம் ,பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்து வருகின்றது.இந்த கன மழையால் 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் 30 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 3 லட்ச மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.இந்த கனமழை காரணமாக இதுவரை 67 பேர் இறந்து உள்ளனர்.மேலும் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் பீகார் மாநிலத்தில் உள்ள சிதமார்ஹி பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி கட்டிடம் ஓன்று வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் சரிந்து விழும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
unknown node