விஜய் மல்லையாவின் விமானம் நிறுத்தப்பட்டுள்ள, மும்பை விமான நிலையத்துக்கு 10 கோடி ரூபாய் வரை பார்கிங் கட்டண வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடன் பெற்று வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகக் குற்றம்சாட்டப்படும் மல்லையாவின் ஏர்பஸ் ஏ 319 விமானம் படுக்கையறை, குளியலறையுடன் கூடிய அதிசொகுசு விமானமாகும்.
ஆயிரம் கோடி ரூபாய் வரி நிலுவையால் அந்த விமானம் சேவை வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட5 ஆண்டுகளாக, பார்கிங் கட்டணம் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
உலகில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களின் ஒன்றான மும்பை விமான நிலையத்தில் மணிக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை விமானங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மல்லையா விமானத்தால் இதுவரை கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் பார்க்கிங் கட்டண வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் தரப்பில் கூறப்படுகிறது.