ஹரியானா கிராமத்தில் போதிய மருத்துவ வசதி இல்லை என கிராமத்து மக்கள் 290 கிமீ நடந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில், சௌதாலா எனும் கிராமத்து மக்கள் தங்கள் கிராமத்தில் போதிய மருத்துவ வசதி இல்லை என்றும் மோசமான மருத்துவ சேவை வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 11 நாட்களாக கிராமத்து மக்கள் நடந்து இதுவரை 290 கிமீ தூரத்தை கடந்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மேற்கொண்ட கிராம மக்கள் திங்கள்கிழமை கர்னால் பகுதியை அடைந்துள்ளனர். ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உட்பட ஐந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், தங்கள் ஊரில் உள்ள சுகாதார மையத்தில் மருத்துவர்கள் கூட இல்லை என்றும் போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.