கடந்த நாட்களாகவே வட மாநிலங்களில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழைபெய்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை மிகவும் கடுமையாக பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டது.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் இதுவரை 29 பேரும், ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 26 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வட மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட் ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் வரும் 19ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
