தமிழகத்திற்கு தருவதற்கு எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை.! கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி.!

இந்நிலையில், காவேரி விவகாரம் குறித்து, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட

Karnataka CM Siddaramaiah

தமிழகத்தில் குருவை சாகுபடி நடைபெறும் சூழலில் மேட்டூர் அணையில் மிக குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஏற்கனவே நதிநீர் பங்கீடு உத்தரவின் பெயரில் தரக்கூடிய  தண்ணீரை தர வேண்டும் என தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழகம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதங்கள் வாயிலாகவும்,நேரடி ஆலோசனை வாயிலாகவும், தமிகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நேற்று, காவேரி மேலாண்மை வாரியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், காவேரி விவகாரம் குறித்து, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட மிக குறைவான அளவே மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை. கேரளா மாநிலம், குடகு மாவட்டங்களில் குறைவான அளவே மழைபெய்துள்ளது .

குறிப்பாக காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் மலையளவு குறைந்ததால், கர்நாடகா நீர்த்தேக்க பகுதியில் குறைவான அளவே தண்ணீர் வந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.