SanatanaDharma : சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம்.! மத்திய அமைச்சர் ஆவேசம்.!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகையில் டெங்கு, கொரோனா போல

Union Minister Gajendra singh shekhawat - TN Minister Udhayanidhi stalin

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகையில் டெங்கு, கொரோனா போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார்.

அமைச்சர் உதயநித்திஷ் ஸ்டாலின் பேச்சுக்கு பாஜகவினர் மட்டுமின்றி சில வலதுர்சாரி அமைப்புகளும் தங்கள் கண்டங்களை கூறியிருந்தனர். மேலும் உத்திர பிரததேசத்தில் ஒரு சாமியார் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பாஜக தரப்பிலேயே எதிர்ப்புகள் இருந்தன.

இந்நிலையில் தான் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், நமது முன்னோர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சனாதன கொள்கைகளை பாதுகாத்து வந்துள்ளனர். அத்தகைய சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்கள் நாக்கை பிடுங்க வேண்டும் என கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மேலும், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கண்களை பிடுங்க வேண்டும் என்றும், சனாதனத்தை எதிர்த்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முடியாது என்றும் வெளிப்படையாக பேசி அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளார் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்.

சனாதனம் குறித்து பேசியதற்கு பல்வறு எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தனது கருத்தில் இருந்து அமைச்சர் உதயநித்திஷ் ஸ்டாலின் பின்வாங்கவில்லை. அதே கருத்தில் தான் உறுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.