வாராக்கடன் பிரச்சனை: ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் என நிதியமைச்சர் தகவல்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (என்ஏஆர்சிஎல்) வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு ரூ.30,600 கோடி உத்தரவாதம் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.5 லட்சம் கோடி வாராக்கடனை வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடன்களுக்கான ஒப்புதல் மதிப்பில் 15 சதவிகிதம் வரை என்ஏஆர்சிஎல் பணம் செலுத்தும், மீதமுள்ள 85 சதவிகிதம் அரசு உத்தரவாத பாதுகாப்பு ரசீதுகளாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 2018 ம் ஆண்டில் 21 பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகள் மட்டுமே லாபத்தில் இயங்கி வந்த நிலையில், தற்போது 2 வங்கிகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025