ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசலாமா? என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின், ஊதியம் பெறும் இயக்குநராக, பல ஆண்டுகாலம் பதவி வகித்தவர் என சிதம்பரம் மீது புகார் கூறியிருக்கிறார். எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதை, சிதம்பரம் தான் விளக்க வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருக்கிறார்.