எங்களால் அந்த விஷயத்தை செய்ய முடியாது.! உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட வாட்ஸப்.!

எங்கிருந்து பரவ தொடங்கியதோ அந்த பயனாளர்களின் தொலைபேசி எண்களை கொடுக்காமல் வெளிப்படையாக பாலியல் வீடியோக்கள் பரவுவதை தடுக்க முடியாது. என வாட்ஸப், டெல்லி

எங்கிருந்து பரவ தொடங்கியதோ அந்த பயனாளர்களின் தொலைபேசி எண்களை கொடுக்காமல் வெளிப்படையாக பாலியல் வீடியோக்கள் பரவுவதை தடுக்க முடியாது. என வாட்ஸப், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸப் செயலி மீது ஓர் வழக்கு பதியப்பட்டு இருந்தது. அதில், தவறான ஓர் பாலியல்  வீடியோ ஒன்று பரவி வருகிறது எனவும் , அதனை தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அதில், வாட்ஸப் சார்பாக வழக்கறிஞர் கபில் சிபில் இன்று வாதிடுகையில், எங்கிருந்து பரவ தொடங்கியதோ அந்த பயனாளர்களின் தொலைபேசி எண்களை கொடுக்காமல் வெளிப்படையாக பாலியல் வீடியோக்கள் பரவுவதை தடுக்க முடியாது. என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், எங்களால் செய்ய முடியாத செயலை நாங்கள் செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபில் வாட்ஸப் சார்பாக வாதிட்டார்.