"சிசிடிவி கேமரா வைஃபை "ரயில்வே மருத்துவமனைகளிலும் வருகிறது..!!

ரயில்கள், ரயில் நிலையங்களை தொடர்ந்து, ரயில்வே மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர்

ரயில்கள், ரயில் நிலையங்களை தொடர்ந்து, ரயில்வே மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 125 ரயில்வே மருத்துவமனைகள் உள்ளன.

unknown node

பாதுகாப்புக்காக அந்த மருத்துவமனை வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருத்துவ ஆவணங்களை பரிமாறிக் கொள்ளவும், ஆலோசனைகள் பெறுவதற்காகவும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் வைஃபை வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

unknown node

வரும் டிசம்பர் மாதத்திற்குள் மண்டல அளவிலான ரயில்வே மருத்துவமனைகளில் சிசிடிவி, வைஃபை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.

DINASUVADU