விவசாயிகள் போராட்டம் தொடருமா....? நாளை முக்கிய முடிவு!

The next stage of the farmers' struggle is to be announced tomorrow.

விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தகட்ட முடிவு என்ன என்பது குறித்து நாளை அறிவிக்கப்பட்ட உள்ளது.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது புதிதாக கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

எனவே வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, குடும்பத்தினருக்கு அரசு வேலை, வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக விவசாயிகள் போராட்டம் தொடருமா? என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், விவசாய போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான குல்வந்த் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.