சென்னை:ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB) மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து முதன்முறையாக X குரோமோசோம் (TEX13B) மரபணு ஆண்களின் விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறிந்துள்ளனர்.
ஆய்வின் படி, ஏழு ஜோடி ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.இந்த ஆய்வு சமீபத்தில் மனித இனப்பெருக்கம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.அதாவது, ஏழு ஜோடி ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், TEX13B என்கிற மரபணுவில் இரண்டு காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று மலட்டுத்தன்மையுள்ள ஆணிடம் மட்டுமே கண்டறியப்பட்டது. மற்றொன்று கருவுற்ற கட்டுப்பாட்டு ஆண்களுடன் ஒப்பிடும்போது மலட்டுத்தன்மையுள்ளஆணிடம் இது தென்பட்டுள்ளது.
unknown nodeX chromosome gene [Image source : MedlinePlus]இது ஒன்றாக சேர்ந்து, புதிய விந்தணுக்களின் உருவாக்கத்தை பாதிக்கிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், CRISPR-Cas9 என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Tex13b மரபணுவை நாக் அவுட் செய்து, சுறுசுறுப்பான விந்தணுக்களை உருவாக்கும் செல்களின் மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், X குரோமோசோம் மரபணு இழந்த செல்களின் சுவாசத் திறனைக் குறைக்கிறது என்றும், TEX13B விந்தணுக்களை உருவாக்கும் உயிரணுக்களில் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆய்வின்படி விந்தணுக் குறைபாடுள்ள மலட்டுத்தன்மையுள்ள ஆண்களை எளிதாக கண்டறியவும், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். TEX13B மரபணு X குரோமோசோமில் உள்ளதாம். அதாவது CCMB-ன் இயக்குநர் வினய் குமார் நந்திகூரி இது பற்றி விவரிக்கையில், “X குரோமோசோம் மரபணுவானது அனைத்து ஆண்களும் தங்கள் தாயிடமிருந்து மட்டுமே பெறுகிறார்கள், அவர்களது தந்தையிடமிருந்து இல்ல.
unknown nodeX chromosome gene study [Image source : The Times]தவறான ‘TEX13B’ மரபணுவை சுமந்து செல்லும் தாய் கருவுறக்கூடியவர் என்று அர்த்தம். ஆனால், தாய் X குரோமோசோமை தவறான TEX13B உடன் சுமந்து செல்லும் பொழுது, மகன் மலட்டுத்தன்மையடைகிறான். ஆண் மலட்டுத்தன்மைக்கு இது ஒரு அடிப்படைக் காரணமாக இருக்கும்” என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
