நீங்கள் தான் இந்நாட்டின் பொருளாதாரம்! குடிமகன்கள் மீது பூ தூவிய நபர்!

நீங்கள் தான் இந்தியாவின் பொருளாதாரம், அரசாங்கத்திடம் பணமே இல்லை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கால், மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். மதுவுக்காக குடிமகன்கள் அங்கும், இங்கும் ஓடி திரிகின்றனர். மேலும், பலர் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள், நேற்று சில மாநிலங்களில் திறக்கப்பட்டது. இதனால், குடிமகன்கள் சமூக விலகலை கடைபிடித்து, நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சந்தர் நகரில் உள்ள மதுக்கடை ஒன்றில், பலரும் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மது வாங்க வரிசையில் காத்திருந்த குடிமகன்கள் மீது அங்கு வந்திருந்த நபர் ஒருவர் பூ தூவி, ‘நீங்கள் தான் இந்தியாவின் பொருளாதாரம், அரசாங்கத்திடம் பணமே இல்லை.’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025