பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞர் கொலை..!

நேற்று  நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் தீபாவளி கொண்டாடினர். மேலும்

நேற்று  நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் தீபாவளி கொண்டாடினர். மேலும் நீதிமன்றம் அனுமதித்த நேரத்தைவிட அதிக நேரம் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்ககப்பட்டது.இந்நிலையில் ஒடிசாவில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையை இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஒரிசாவின் புவனேஸ்வர் பகுதியை அமரேஷ் நாயக் என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து பட்டாசு வெடித்து உள்ளார்.அவர் வெடித்த பட்டாசு அனைத்தும் அதிக சத்தம் இருப்பதாக  கூறி ஒரு கும்பல் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவர் கூர்மையான கத்தியால் அமரேஷை வெட்டியுள்ளார். இதில்  காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவ மனைக்கு செல்வதற்குள் இறந்துவிட்டார். பின்னர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.