சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6282 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்ததால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,231 பேரும், திரு.வி.க. நகரில் 1032 பேரும் பாதிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
unknown node