மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் !

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமழகத்தில்  கொரோனா வைரஸால் 1865 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 960 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நிலவரப்படி 825 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுப்போன்று செய்திகளை கேட்கும் போது நிம்மதியாக இருப்பதாக மக்கள் கூறிவருகின்றனர்.