இருசக்கர வாகனத்தில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்! மருத்துவமனையில் அனுமதி!

இருசக்கர வாகனத்தில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இருசக்கர வாகனத்தில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில காலங்களாக மாஞ்சா நூலால் பல உயிர்கள் பறிபோன நிலையில், இந்த நூலை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பவர் அம்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அந்த வேளையில், தாம்பரம் – மதுரவாயல்  சாலையில் வந்து கொண்டிருந்தபோது அங்கு சிக்கிக் கொண்டிருந்த காத்தாடியின் மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்ததுள்ளது. அதில் நிலைகுலைந்து போன பரசுராமன் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.

unknown node

இதையடுத்து அந்த வழியே வந்த சிலர் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.