எங்களுக்கு விமான சேவை வேண்டாம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.!

தமிழகத்தில் வரும் 25 -ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் வரும் 25 -ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மார்ச் மாதம்  25-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகின்ற  25-ம்  தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என அந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  தமிழகத்தில் வரும் 25 -ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜூன் மாதத்திற்கு பிறகு  தமிழகத்தில் விமான சேவை தொடங்கலாம் என  எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.