சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை TNPSC ஆல் வெளியிடப்படவில்லை. மேலும், […]
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது, ஏற்கெனவே பணமோசடி வழக்கு இருப்பது அம்பலமாகியுள்ளது. அதன்படி, அவர் மீது ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமங்கலத்தை சேர்ந்த ராஜாங்கம் உள்ளிட்ட மூவரிடம் நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் […]
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்க செனட். இது தொடர்பான மசோதாவை செனட்டில் முன்மொழிந்து, வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் […]
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் “Peak hours” நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர, கூடுதலாக விதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்த முடிவு, அதிக தேவை உள்ள நேரங்களில் இந்த நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க உதவும் என்றாலும், பயனர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல் மற்றொரு அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் 14.1.2025 அன்று பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் அபுதுல்லா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு ஆகியோர் இளைஞரை தாக்கியதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் […]
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ”சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியது என்பதால் அதை முழுமையாக நம்ப வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து OpenAI இன் அதிகாரப்பூர்வ பாட்காஸ்டின் முதல் எபிசோடில் பேசிய ஆல்ட்மேன், ”AI என்பது தவறுகள் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது பயனர்கள் AI-இன் பதில்களை விமர்சன ரீதியாக அணுகவேண்டும் என்பதை உணர்த்துகிறது. ‘ChatGPT […]
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) போராட்டம், அதே மைதானத்தில் ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால், வரும் ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேபாக்கம் சிவானந்தா சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற […]
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் […]
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 இன் மூன்று பேர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியதாக பங்களாதேஷின் முக்கிய ஆங்கில நாளிதழான […]
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மேலும், பாமகவினர் யாரும் அருளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். அருள், கட்சித் தலைமை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி […]
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம்” (Employment Linked Incentive – ELI) மத்திய அமைச்சரவையால் 2025 ஜூலை 1 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம், அனைத்து முறைசார் துறைகளிலும், குறிப்பாக உற்பத்தித் துறையில், 3.5 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், புதிதாக […]
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு காவல்துறையில் இயங்கி வரும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரல் (DGP) ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த உத்தரவு, 2025 ஜூலை 2 அன்று அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. திருப்புவனம் சம்பவத்தில், அங்கீகரிக்கப்படாத தனிப்படையைச் சேர்ந்த காவலர்கள் அஜித்குமாரை […]
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 ஜூலை 2 அன்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நவீன்குமாருக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார். அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டம் நடத்தியிருந்தனர். இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு ஜூலை 7 வரை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. எனினும் தமிழகத்தின் பெரும்பான்மை இடங்களில் வெயில் கொளுத்தும். சென்னையில் வெப்பநிலை 98.6-100,4 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவு ஆகலாம் என தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 02-ஆம் தேதி தமிழகத்தில் ஒரிரு […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட மோதல், மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூலை 1 அன்று பத்திரிகையாளர்கள், “மஸ்க்கை நாடு கடத்துவீர்களா?” என்று கேட்டபோது, ட்ரம்ப், “அதைப் பற்றி தெரியவில்லை, அதைப் பார்க்க வேண்டும்,” என்று மழுப்பலாக பதிலளித்தார். இது குறித்து பேசிய அவர் ” மஸ்க்கை நாடு கடத்த […]
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல் 9, 2025 வரை 8 நாள் அரசுமுறைப் பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா, மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். […]
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் நிறுவனங்களும் சமமாக போட்டியிடும் வகையில் “மிகக் குறைவான வரிகளை” (Much less tariffs) கொண்டதாக இருக்கும் என்று அவர் கூறினார். இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (Bilateral Trade Agreement – BTA) ஜூலை 9, 2025 காலக்கெடுவிற்கு முன் முடிவு செய்ய, இந்திய பேச்சுவார்த்தைக் குழு வாஷிங்டனில் […]
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 1995 முதல் பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளில் தொடர்புடைய இவர், 2011இல் மதுரை-திருமங்கலம் வழியாக முன்னாள் பிரதமர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் முக்கிய தேடப்பட்டவர் ஆவார். அபுபக்கர் சித்திக்குடன், திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த […]
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து திமுகவுடனான உடன்பாட்டின் போது முடிவு செய்யப்படும் என அறிவித்தார். சென்னையில் 2025 ஜூன் 29 அன்று நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்திற்குப் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் திராவிடக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள். திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடர்வோம். ஆனால், எத்தனை தொகுதிகள் வேண்டும் என இதுவரை எந்தக் […]
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு, ராக்கெட் ஏவுதல், விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ் பயணம், பூமியின் நேரலை காட்சிகளை ஒளிபரப்பவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக்காலம் முதல் அனைத்து உறுப்பினர்களின் ஒரு பகுதியாக, இந்த சேவை தளத்தில் கிடைக்கும் என்று விண்வெளி நிறுவனமும், ஸ்ட்ரீமிங் தளமும் அறிவித்தன. அதன்படி, […]