504-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]
இந்த வருடம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கலைஞர் நூற்றாண்டு விழாவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று தஞ்சாவூரில் மாநகராட்சி அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இன்றைய கலைஞர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் வந்திருந்தார். தற்போது தஞ்சை மாநகராட்சி அரங்கில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பங்கேற்ற பேசி வருகிறார். […]
கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் இறையூரை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்தனர். பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் இந்த விவகாரத்தை தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த நிலையில் , இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தங்கள் விசாரணையை துவங்கி 100க்கும் […]
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள், தொழிற்சாலைகளில் வட இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்வதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், உள்ளூர் மக்கள் அதிக ஊதியமும், அதிக விடுமுறையும் கேட்பதுடன் குறைந்த அளவில் மட்டுமே வேலை செய்வதால் அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? தமிழக அரசு விளக்கமளிக்க […]
நீண்ட நாட்களாக குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரை அனுப்பியிருந்தோம். ஆனால், இதுவரை ஆளுநர் ஒப்புதல்அளிக்கவில்லை . இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி […]
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதில் கூறினார். குறிப்பாக ஆசிரியர்கள் போராட்டம், அண்ணாமலை கூறிய பாஜக vs திமுக விவகாரம், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றிய விவகாரம் என பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டார். கடந்த 8 நாட்களாக பகுதிநேர மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராடியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக ஆட்சிக்கு வருவதற்கு […]
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 90 ஆண்டுகளாக இந்த மார்பக புற்றுநோய் மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடையாளமாக இளஞ்சிவப்பு நிறத்தை வைத்து ரிப்பன் குத்துவது, பேரணி மேற்கொள்வது போன்ற விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் இந்த அக்டோபர் மாதம் ‘பிங்க் அக்டோபர்’ மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அக்டோபர் மாதத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர் […]
கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சனாதன சர்ச்சை விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் […]
அதிமுகவும், பாஜகவும் எங்களுக்கு ஒன்றுதான் என திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் இனி போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு நேற்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வகைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். […]
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் அண்மையில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் இந்து கோவில்களை ஆளும் திமுக அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், அதன் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பது அநியாயம் என்றும் இதே போல சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை ஏன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை என்றும் பல்வேறு விமர்சனங்களை பிரதமர் மோடி தமிழக அரசின் மீது முன் வைத்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று சென்னையில் நடைபெற்ற […]
குறிப்பிட்ட ஒவ்வொரு துறையிலும் உலக அளவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் நோபல் பரிசானது இந்தாண்டும் கடந்த திங்கள் கிழமை (அக். 2) முதல் அறிவிக்கப்ட்டு வருகிறது. திங்களன்று மருத்துவத்துறை சார்பில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அடுத்து செவ்வாயன்று இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்களான ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து […]
கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஓர் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. பொதுமக்கள் கையிறுப்பில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும். அதனை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. 20000 ரூபாய் […]
சம வேலை சம ஊதியம் , சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை, நுங்கம்பாக்கம், டிபிஐ அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசியரியர்கள் சங்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பகுதிநேர ஆசிர்யர்களின் தொகுப்பூதியத்தை 10 ஆயிரத்தில் இருந்து 2500 ரூபாய் வரை உயர்த்தி 12500 ரூபாய் வழங்கப்படும், […]
நேற்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் NDA கூட்டணி சார்பாக தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். அதற்கு தற்போது அறிகுறிகள் தெரிகின்றன. என்மீது அதிமுக மட்டுமல்ல பல கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. நான் எனது பாதையில் […]
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது தங்கபாண்டியனிடம் விவசாயி ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் விவசாயியை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த தங்கபாண்டியனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் அவர் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை இடைநீக்கம் செய்து […]
இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு 2024 ஏப்ரல் – மேவில் நாடளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் இந்த 5 மாநில தேர்தல் என்பது மிக முக்கிய தேர்தலாக , பாஜக – காங்கிரஸ் கட்சிக்கு ஓர் முன்னோட்ட தேர்தல்களாக பார்க்கப்படுகிறது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தான் இந்த வருட இறுதிக்குள் சட்டபேரவை தேர்தல் வரவுள்ளது. இதில் 2 மாநிலங்களில் காங்கிரஸ் […]
கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னையில், காமராஜர் அரங்கில் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு ” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திமுக எம்பி ஆராசா , திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த நிகழ்ச்சிக்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என வைக்காமல் , சனாதன ஒழிப்பு மாநாடு […]
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிப்பெற்ற மாணவர்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1200 இளைஞர்களுக்கு இன்று பணிநியமன ஆணை வழங்குவதில் மகிழ்ச்சி. 4 மாதங்களுக்கு முன்பாக 1400 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்த நிலையில், […]