உக்ரைனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் கார்கிவ் பகுதியில் உள்ள ஹ்ரோசா கிராமத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 19 மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பிறகு கார்கிவ்வில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது […]
சென்னையில் அக்.9ம் தேதி அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ‘உழைப்பவரே உயர்ந்தவர்’, ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழிகளை தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்து வரும் தொழிலாளர்கள், அனைத்து நிலைகளிலும் இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அதிமுக ஆட்சிக் காலங்களில் தொழிலாளர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியும், எண்ணற்ற உதவிகளை செய்தும், தொழிலாளர்களுடைய நலன்கள் பேணி பாதுகாக்கப்பட்டு […]
டெல்லியில் புதிய மதுபான கொள்கையை அம்மாநில ஆம் ஆத்மி அரசு கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் அமல்படுத்தியது. இதன்படி, டெல்லியில் மதுபான விற்பனையானது மாநில அரசிடம் இருந்து தனியார் வசம் கொடுக்கப்பட்டது. அதன்படி 800க்கும் மேற்பட்ட மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திடீரென இந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது. இந்த மதுபான கொள்கை மூலம் அரசுக்கு 2800 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு ஏற்பட்டதாகவும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
அதிமுக – பாஜக தலைவர்களிடையே ஏற்பட்ட தொடர் கருத்து மோதல்கள், அதிமுக தலைவர்கள் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த தொடர் விமர்சனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இரண்டு முறை செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். இந்த கூட்டணி முறிவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களை […]
காவிரி ஆற்றில், கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 12-6-2023 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. […]
திருச்சி முக்கொம்பு பகுதிக்கு நண்பருடன் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவிட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 பேரையும் திருச்சி மகிளா […]
திமுக பொருளாளர் டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் டிசம்பர் 21ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப் படியலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதற்கு திமுகவினர் கடும் தீர்ப்பு தெரிவித்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதுமட்டுமில்லாமல் அவதூறு பரப்புவதாக கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குகளும் தொடரப்பட்டது. அந்தவகையில், வதூறான கருத்துக்களை பாஜக […]
ஒவ்வொரு வருடமும் மருத்துவம், இயற்பியல் , வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உலக அளவில் சிறப்பாக செயலாற்றுவர்களுக்கு நோபல் விருது வழங்ப்படும். இதற்கான விருதுகள் திங்கள் கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த திங்கள் கிழமை அக்டோபர் 2ஆம் தேதி மருத்துவத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி கண்டறிந்ததற்காக ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள் செவ்வாயன்று அக்டோபர் […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை அக்.31க்கு ஒத்திவைத்தது சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம். கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் […]
இன்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வகைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில், நம்மிடம் இருந்து பிரிந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமையிடம் விளக்கம் அளித்துள்ளேன். இனி தேசிய தலைமை முடிவு செய்யும் என அண்ணாமலை […]
அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் தமிழக பாஜக அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கமாக விளங்கிய அதிமுக விலகியது பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் ஓர் பாதிப்பாக பேசப்பட்டாலும், பாஜகவினரின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தெளிவாக தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. ஏற்கனவே இந்த கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று இருந்தார். அங்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் […]
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இன்று சென்னையில் பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். கட்சி விஷயமாக அண்ணாமலை டெல்லி சென்றிருந்ததால் ஆலோசனை கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து, அதிமுகவின் அறிக்கை குறித்து அண்ணாமலை அவர்கள், பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்று தெரிவித்திருந்தார். அதன்பின், அண்ணாமலை அவர்கள் டெல்லி சென்று அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து […]
இன்று வள்ளலாரின் 200வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளலாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை ராஜ்பவனில் (ஆளுநர் மாளிகை) வள்ளலாரின் சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி வள்ளலாரின் சிலையை திறந்து வைத்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவை காணொளி வாயிலாக கண்டு உரையாற்றினார். அப்போது அவர் வள்ளலாரின் பெருமைகளை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களை மக்களிடம் தெரிவித்தார். அதில், தற்போதைய நவீன கல்விதித்திட்டத்திற்கு வள்ளலாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இளைஞர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக எம்பி ஜெகத்ரக்ஷகனின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளதற்க்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், திமுக எம்பி ஜெகத்ரக்ஷகனின் வீட்டில் சோதனை நடத்துவதும் இந்தியத் தொகுதித் தலைவர்களுக்கு எதிரான அரசியல் நோக்கங்களுக்காக சுதந்திரமான விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகளாகும். எதிர்க்கட்சித் தலைவர்களை […]
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக வேலை செய்து வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்றும், வேலைக்கேற்ற சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தில் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை அடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் நேற்று தெரிவித்த […]
நாமக்கல் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் இந்த விபத்தின் போது வீட்டில் இருந்த பார்த்தசாரதி, தனலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தானது சிலிண்டரை மாற்றும்போது கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதின் காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக […]
ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும், வேலைக்கேற்ற உரிய ஊதியம், வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தில் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை முக்கிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2,500 வரையில் தொகுப்பூதியம் உயர்த்தி […]